இலங்கை செய்தி

யாழில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே இருவர் பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் அண்ணன் மற்றும் தங்கை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம், கொழும்புத்துறைப் பகுதியை அண்மித்த பகுதியில் இன்று மாலை (16) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மணியந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த   24 வயதான நபர் மற்றும் அவரது   19 வயதான சகோதரியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

குறித்த இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, பவுசருடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

விபத்தில் இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!