அமெரிக்காவில் வேகமாக பரவும் காட்டுத்தீ – 10,000 வீடுகள் மற்றும் 13,000 கட்டிடங்கள் ஆபத்தில்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் தொடங்கிய பாரிய காட்டுத் தீ, தெற்கு கலிபோர்னியா முழுவதும் பரவி வருகின்றது.
சுமார் 20 ஏக்கர் சிறிய நிலப்பரப்பில் தொடங்கிய காட்டுத் தீ, சில மணி நேரங்களில் 1,200 ஏக்கருக்குப் பரவி, அப்பகுதியில் உள்ள 10,000 வீடுகள் மற்றும் 13,000 கட்டிடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் தீயணைப்புத் துறையின் தலைவர் கிறிஸ்டின் குரோலியின் கூற்றுப்படி, 250 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும்
ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கையாக அப்பகுதியில் இருந்து 30,000க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிலைமை மேலும் மோசமடையலாம் என வானிலை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
பலத்த காற்று வீசியதால் தீயில் இருந்து எறியப்படும் தீப்பொறிகள் பல மைல்களுக்கு பயணித்து புதிய தீ பரவும் அபாயம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் உள்ள பல பாடசாலைகள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளதுடன், அவசரநிலை ஏற்பட்டால் அப்பகுதியை விட்டு வெளியேற தயாராக இருக்குமாறு பிரதேசவாசிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஏற்கனவே அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.