பிரான்ஸின் பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் – பாரிய போராட்டம்!
ஐந்து தென் அமெரிக்க நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளதை எதிர்த்து, பாரிஸில் விவசாயிகள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பிரான்சின் நாடாளுமன்றத்தின் கீழ் சபையின் முன் நேற்று குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மெர்கோசூர் (Mercosur) நாடுகளான பிரேசில், அர்ஜென்டினா, பொலிவியா, பராகுவே மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுடன் முன்னெடுக்க திட்டமிட்டு வரும், வர்த்தக ஒப்பந்தத்தை பிரெஞ்சு விவசாயிகள் பல ஆண்டுகளாக எதிர்த்து வருகின்றனர்.
இது மாட்டிறைச்சி, கோழி, சர்க்கரை, எத்தனால் மற்றும் தேன் போன்ற பிற துறைகளின் உற்பத்தியை அச்சுறுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இருப்பினும் அரசாங்கம் வரும் 12 ஆம் திகதி இது தொடர்பான ஒப்பந்தத்தை கைச்சாத்திடவுள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையிலேயே போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போராட்டகாரர்களில் சிலர் ஆர்க் டி ட்ரையம்பே ( Arc de Triomphe) நினைவுச்சின்னத்திலும் சிலர் ஈபிள் கோபுர சுற்றுப்புறத்திலும் திரண்டதாக உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை விவசாயி களின் போராட்டங்களுக்கு மத்தியில், பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்ப்டுள்ளது.





