வவுனியாவில் குளங்கள் நிரம்பி வழிவதால் கவலையில் விவசாயிகள்!
வவுனியா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக வவுனியாவில் மொத்தமுள்ள 639 குளங்களில் 415 குளங்கள் நிரம்பி வழிவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ. சரத்சந்திர தெரிவித்தார்.
வவுனியாவில் பாவற்களம் உட்பட விவசாய சேவைகள் திணைக்களத்தின் கீழ் உள்ள 415 குளங்கள் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குளங்கள் நிரம்பி வழிவதால் வவுனியா மகாகன்னாவில் பயிரிடப்பட்டிருந்த பெருமளவிலான நெற்செய்கைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், சீரற்ற காலநிலை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)





