கோலி வெளியிட்ட பதிவால் குழப்பமடைந்த ரசிகர்கள்!
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு நேற்று அறிவித்திருந்தார்.
அதனை சில மணி நேரத்திலேயே ஏ.ஆர். ரகுமானும் உறுதி செய்தார். இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்திய கிரி்க்கெட் அணியில் நட்சத்திர வீரராக வலம் வரும் விராட் கோலி போட்ட பதிவு இணைய உலகத்தை அதிர வைத்துள்ளது.
அவர் விளம்பர புரோமோசனுக்காக ஒரு பதிவை போட்ட சூழலில், அதனை விராட் கோலியின் விவாகரத்து அறிவிப்பாக பலரும் தவறாகப் புரிந்து கொண்டனர்.
அவர் குறிப்பிட்டு இருப்பதை பொறுமையாக வாசித்த பின்னர் தான் அது குறிப்பிட்ட பிராண்ட்டை விளம்பரம் செய்வதற்காக என்பதை புரிந்து கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், கோலியின் அந்தப் பதிவுக்கு ரசிகர்கள் சுவாரசியமான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதனால், கோலியின் அந்தப் பதிவு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.