கொலம்பியாவில் விமான விபத்தில் உயிரிழந்த பிரபல பாடகர்
மத்திய கிழக்கு கொலம்பியாவில்(Colombia) நடந்த விமான விபத்தில் கொலம்பிய பாடகரும் பாடலாசிரியருமான யீசன் ஜிமெனெஸ்(Yeason Jimenez) உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
பைபா(Paipa) விமான நிலையத்திலிருந்து மெடலினுக்கு(Medellin) புறப்பட்ட சிறிது நேரத்திலேயே தனியார் விமானம் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
34 வயதான ஜிமெனெஸ் இரவு நிகழ்ச்சிக்காக மெடலினுக்கு புறப்பட்ட போதே விபத்து ஏற்பட்டுள்ளது.
கொலம்பியாவில் N325FA விமானம் பைபா மற்றும் டியூடாமா(Tudama) இடையேயான பகுதியில் விபத்துக்குள்ளானதாக சிவில் ஏரோநாட்டிக்ஸின் சிறப்பு நிர்வாக பிரிவு(SAUCA) ஒரு அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விமான விபத்துக்கான காரணத்தை கண்டறிய விஷேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





