ஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 தொடரை தவறவிடும் பிரபல நியூசிலாந்து வீரர்கள்

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான வில் ஒ ரூர்க், கிளென் பிலிப்ஸ், பின் ஆலன் மற்றும் T20, ஒருநாள் அணியின் கேப்டனான மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் காயத்தில் சிக்கியுள்ளனர்.
இதில் ஓ ரூர்க் மற்றும் பின் ஆலனிற்கு ஏற்பட்டுள்ள காயம் குணமடைய 3 மாதங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. ரூர்க்கிற்கு முதுகுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
மறுபுறம் பின் ஆலனிற்கு காலில் அறுவை செய்யப்பட்டுள்ளதால் குறைந்தது 3 மாத காலம் ஓய்வில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளென் பிலிப்சுக்கு இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் ஒரு மாத காலம் போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.
அதேபோல் நியூசிலாந்து வெள்ளைப்பந்து அணியின் கேப்டனான சாண்ட்னரும் இடுப்பு பகுதி காயத்தால் அவதிப்பட்டு வருவதால் ஏறக்குறைய ஒரு மாத காலம் ஓய்வு எடுக்க வேண்டும் என கூறப்படுகிறது.
இதன் காரணமாக வில் ஒ ரூர்க், கிளென் பிலிப்ஸ், பின் ஆலன் மற்றும் மிட்செல் சாண்ட்னர் ஆகிய 4 நியூசிலாந்து வீரர்களும் வரும் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை தவறவிட உள்ளனர்.