வட அமெரிக்கா

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல மொடல் அழகி!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மொடல் அழகி ஜிகி ஹடிட், தனது நண்பர்களுடன் கேமன் தீவுகளுக்குத் தனியார் விமானம் மூலம் சென்றார். ஓவன் ராபர்ட்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் ஜிகி ஹடிட் மற்றும் நண்பர்களின் உடைமைகளைச் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் கஞ்சா மற்றும் கஞ்சாவைப் புகைக்கப் பயன்படுத்தப்படும் கருவிகள் இருந்தது. இதையடுத்து ஜிகி ஹடிட்டும், அவரது நண்பர் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.விசாரணைக்குப் பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகி தங்களது குற்றத்தை ஒப்புக் கொண்டனர். இருவருக்கும் தலா ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

இதற்கிடையே ஜிகி ஹடிட் சமூக வலைதளத்தில் தனது புகைப்படத்தை வெளியிட்டு எல்லாம் நன்றாக இருக்கிறது. நன்றாகவே முடிந்தது என்று பதிவிட்டுள்ளார்.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!