இலங்கை

மட்டக்களப்பு பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் நேற்று(07) மாலை யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.

விவேகானந்தபுரம் ஆயிரம்கால் மண்டபம் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தும்பங்கேனி சுரவனையடிஊற்று கிராமத்தை சேர்ந்த 59 வயதுடையை நாகமணி நாராயனபிள்ளை என்ற 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

விவேகானந்தபுரம் ஆயிரம்கால் மண்டபத்தில் உள்ள வைரவர் ஆலயத்துக்கு நேற்று மாலை ஆலய வழிபாட்டுக்கு சென்றவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று காலை அப்பகுதிக்கு சென்றவர்கள் குறித்த பகுதியில் சைக்கிள் மற்றும் சடலத்தினை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் அப்பகுதிக்கு சென்ற வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

தொடர்ச்சியாக இப்பகுதி மக்கள் காட்டு யானையின் தாக்குதல்களுக்கு உள்ளாகிவரும் நிலையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

பலகாலமாக வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் யானை மனித மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!