ஐரோப்பா முக்கிய செய்திகள்

சுவிற்சர்லாந்தில் சரிந்து விழும் பாறைகள் – அவசரமாக வெளியேற்றப்பட்ட மக்கள்

சுவிற்சர்லாந்தில் உள்ள கிராமம் ஒன்றில் இருந்து நூற்றுக்கு மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

சுவிற்சர்லாந்தில் அமைந்துள்ள அல்ப்ஸ் மலைப் பகுதியில் இருக்கும் பிரையன்ஸ் என்ற ஒரு அழகிய கிராமத்திலிருந்தும் பண்ணைகளை விட்டுமே மக்கள் இவ்வாறு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மலையிலிருந்து பாறைகள் சரிந்து விழுவதால் உடனடியாக அக்கிரமத்திலிருந்து மக்கள் வெளியேற்பட்டனர்.

அல்பைன் மலையின் மேல்பகுதியில் உள்ள சுமார் இரண்டு மில்லியன் கனமீட்டர் பாறைகள் விரைவில் சரிந்து விழும் என சுவிஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

பல தலைமுறைகளாக மலையில் அரிப்பு ஏற்பட்டதால் மலையிலிருந்து வெள்ளை, சாம்பல், மஞ்சள் நிறத்தில் பாறைகளும் மண்ணும் சரிந்து விழுகின்றன.

விழுகின்ற பாறைகள் கிராமத்தின் எல்லையில் அண்மிப்பதால் மக்கள் வெளியேற்றப்பட்டனர். போக்குவரத்து வீதிகளும் தடை செய்யப்பட்டன.

ஆங்காங்கே பாறைகள் மோதும் சத்தம், பாறைகளின் சிறிய எச்சங்கள் நேற்ற வெள்ளிக்கிழமை மலை முகப்பிலிருந்து கீழே சரியும் போது ஏற்படும் சத்தம் கிராமத்திற்கு ஒரு வினோதமான உணர்வைக் கொண்டு வந்தன.

 

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்