ஜார்க்கண்டில் குழந்தையின் கண் முன் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த போலி மருத்துவர்
ஜார்க்கண்டின்(Jharkhand) பலாமு(Palamu) மாவட்டத்தில் 26 வயது பெண் ஒருவர் தனது குழந்தையின் கண் முன் போலி மருத்துவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குழந்தை சளியால் அவதிப்பட்டு வந்ததால் சத்தர்பூர்(Chhatarpur) காவல் நிலையப் பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அந்தப் பெண் சென்றுள்ளார்.
பின்னர், போலி மருத்துவர் அந்த குழந்தைக்கு நீராவி உள்ளிழுக்க(steam inhalation) வேண்டும் என்று அந்தப் பெண்ணிடம் கூறி, அதற்காக மருத்துவமனைக்கு அருகில் உள்ள தனது வீட்டிற்கு வருமாறு தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து தனது குழந்தையுடன் வீட்டிற்குள் நுழைந்தவுடன், கதவைப் பூட்டிவிட்டு, அவளை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் டிசம்பர் 5ம் திகதி நடந்தது, ஆனால் இந்த விஷயம் 3 நாள் கழித்து புகார் செய்யப்பட்டது. பின்னர் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார்.




