பணம் தருவதாக கூறி இலங்கையர்களுக்கு வரும் போலி அழைப்புகள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பணம் வழங்குவதாகக் கூறி கையடக்கத் தொலைபேசிகளில் வரும் குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளைக் கண்டு ஏமாற வேண்டாம் என்று இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு மன்றம் அறிவுறுத்துகிறது.
போலியான தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் கோரும் நபர்கள் குறித்து தகவல் கிடைத்துள்ளதாக அதன் மூத்த தகவல் பொறியாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார்.
“இப்போதெல்லாம், உங்கள் மொபைல் போனில் போலியான செய்திகள் வரலாம். பரிசுகளை வென்றதாகக் கூறலாம். பல்வேறு தள்ளுபடிகள், வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்புகள், வெளிநாட்டு வேலைகள் போன்றவற்றைப் பற்றி அவர்கள் உங்களுக்கு செய்திகளை அனுப்பலாம். அத்தகைய செய்திகள் மூலம் தனிப்பட்ட தகவல்களைப் பகிர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.





