மலையகத்திலும் ரயில் பயணச்சீட்டு கட்டணத்தை மீளப் பெறும் வசதி
கொழும்பிற்கு அப்பாற்பட்ட பகுதிகளிலும் பயணச்சீட்டு கட்டணத்தை மீளப் பெறும் வசதி விரிவுப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் இலங்கை ரயில்வே இதனை அமுல்படுத்தும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பல தசாப்தங்களாக கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் மட்டுமே பயணச்சீட்டு கட்டணத்தை மீளப் பெறும் வசதி வசதி காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பதுளை, எல்ல, பண்டாரவளை, ஹப்புத்தளை, நானுஓயா மற்றும் ஹட்டன் ஆகிய இடங்களில் இந்த வசதி கிடைக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வசதி ஒரு முன்னோடித் திட்டமாக அநுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ராய்வே நிலையங்களிலும் கிடைக்கும் என்று அவர் கூறினார்.
அடுத்த ஆண்டு ஜனவரி முதல் கண்டி ரயில் நிலையம் இந்தப் பட்டியலில் சேரும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.





