இஸ்ரேலின் புதிய ராணுவத் தலைவராக இயல் ஜமீர் நியமனம்
இஸ்ரேலின் முன்னாள் கமாண்டர் இயல் ஜமீர் புதிய ஆயுதப் படைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹமாஸின் அக்டோபர் 7, 2023 தாக்குதலைத் தடுப்பதில் “முழுமையான தோல்வியை” இராணுவம் ஒப்புக்கொண்ட பிறகு, அவர் இந்தப் பணியைப் பெறவுள்ளார்.
முன்னர் பாதுகாப்பு அமைச்சின் இயக்குநராக இருந்த ஜமீர், பதவி விலகும் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவை தொடர்ந்து பணியாற்றவுள்ளார்.
ஹெர்சி ஹலே தனது ஆணையை நிறைவேற்றத் தவறியதாக ஒப்புக்கொண்டு ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
59 வயதான ஜமீர், ஹமாஸுடனான இஸ்ரேலின் போரில் ஒரு முக்கியமான நேரத்தில் பதவியேற்கிறார்.





