இலங்கையில் கடும் வெப்பமான வானிலை – மக்களுக்கு வைத்தியர் விசேட எச்சரிக்கை
இலங்கையில் நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனால் பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை நிலவும் வெப்பமான வானிலை காரணமாக, பாடசாலைகளில் விளையாட்டு நிகழ்வுகளை நடத்தும்போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
இந்தநிலையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
(Visited 20 times, 1 visits today)





