ஸ்பெயினை அச்சுறுத்தும் கடும் வெப்பம் – மரணங்கள் ஏற்படும் அபாயம் – அதிகாரிகள் எச்சரிக்கை
ஸ்பெயினில் வீசும் அனல்காற்றால் சில பகுதிகளில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸைக் கடந்துள்ளமையினால் மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
தென் பகுதியில் வெப்பநிலை 44 பாகை செல்சியஸை எட்டியுள்ளது. தலைநகர் மட்ரிடில் (Madrid) அது 40 பாகை செல்சியஸைத் தாண்டியது.
அதிகரிக்கும் வெப்பத்தால் மரணங்கள் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆண்டு அதிக வெப்பத்தாலும் உடலில் நீர்ச்சத்துக் குறைந்ததாலும் 350க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
2021ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க அது ஏறக்குறைய 90 விழுக்காடு அதிகம் என்று அரசாங்கப் புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது.
அண்மை ஆண்டுகளில் ஜூன் மாதத்தில் வெப்பம் படிப்படியாக உயர்ந்துவருகிறது.
(Visited 8 times, 1 visits today)