ஈரானில் உச்சக்கட்ட வறட்சி – செயற்கை மழை பொழிய வைக்க நடவடிக்கை
ஈரானில் செயற்கை மழையை பொழிய வைக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
ஈரானில் நிலவும் பல ஆண்டுகால மிக மோசமான வறட்சியைச் சமாளிக்க, அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
ஈரானின் மிகப்பெரிய ஏரியான உர்மியா ஏரி (Urmia Lake) கிட்டத்தட்ட வறண்டுவிட்டது.
இந்த நிலையில், அந்த ஏரி அமைந்த பகுதியில் செயற்கை மழை பெய்ய வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக IRNA செய்தித் தளம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, கிழக்கு மற்றும் மேற்கு அசர்பைஜான் (Azerbaijan) வட்டாரங்களில் கூடுதல் செயற்கை மழை முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் தெஹ்ரானில் நூறு ஆண்டு காலத்தில் இல்லாத அளவுக்குக் குறைவான மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
கடந்த சில மாதங்களாக நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் மழையே பெய்யவில்லை, இதனால் வறட்சியின் தீவிரம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.




