ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட நெருக்கடி – தேர்தல் நடத்த திட்டம்
ஜெர்மானியில் தேர்தல் நடத்துவது பற்றிய பேச்சுக்குத் தயார் என சான்ஸ்லர் ஓலாப் ஷோல்ஸ் (Olaf Scholz) தெரிவித்துள்ளார்.
ஜெர்மனியில் 3 கட்சிகளின் கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்துவிட்டது. மார்ச் மாதம் தேர்தல் நடத்தத் தயார் என்று பிரதமர் தெரிவித்தார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் ஜனவரி மாதமே தேர்தல் வேண்டும் என்று கூறுகின்றன. ஜெர்மனி மோசமான பொருளாதார சிரமத்தையும் பதற்றமான உலகத்தையும் சந்தித்துக்கொண்டிருக்கின்றது.
இந்த நேரத்தில் புதிய அரசாங்கம் அமைப்பது நல்லது என்று பெரும்பாலான மக்கள் விரும்புவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவர முயல்கின்றமை குறிப்பிடத்தக்கது.





