பிரிட்டனில் ‘பௌடிக்கா’ காலத்து அரிய போர் எக்காளம் கண்டெடுப்பு
பிரிட்டனின் நார்ஃபோக் (Norfolk) பகுதியில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான, மிகவும் அரிதான ‘கார்னிக்ஸ்’ (Carnyx) எனும் போர் எக்காளத்தை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
காட்டு விலங்கின் தலை வடிவில் வெண்கலத்தால் ஆன இந்த எக்காளம், போர்க்களத்தில் எதிரிகளை அச்சமூட்ட பயன்படுத்தப்பட்டது.
இது கி.பி. முதலாம் நூற்றாண்டில் ரோமானியர்களை எதிர்த்துப் போரிட்ட ராணி பௌடிக்காவின் ‘ஐசினி’ (Boudicca – Iceni) பழங்குடியினருடையதாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
உலகிலேயே மிக முழுமையான நிலையில் கிடைத்துள்ள இந்த அபூர்வ கண்டுபிடிப்பு, இரும்புக்கால போர் முறைகளைப் பற்றிய புதிய புரிதலை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.





