எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து : நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ள இணக்கம் தெரிவிப்பு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு ஏற்புடையதான இடைக்கால நட்ட ஈட்டை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தேவையான அறிவித்தல்களை கப்பலின் காப்புறுதிக் கூட்டுதாபனத்திற்கும், சட்டதரணிகள் நிறுவனத்திற்கு அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை சமர்ப்பித்திருக்கும் இடைக்கால நட்டஈட்டு அறிக்கைகளுக்கமைவாக இந்த இடைக்கால நட்டஈடு பெற்றுக்கொள்ளப்பட இருக்கிறது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புக்களுக்கான இடைக்கால நட்டஈடாக 8 இலட்சத்து 78 ஆயிரம் டொலர் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 9 times, 1 visits today)