ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு கண்டுப்பிடிப்பு!
ஜேர்மனியின் Dusseldorf நகரில் இரண்டாம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டொன்று இனங்காணப்பட்டுள்ளது.
நகரத்தின் மிருக காட்சிசாலைக்கு அருகில் குறித்த வெடிகுண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதன்காரணமாக குறித்த பகுதியில் இருந்து சுமார் 13000 மக்களை வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் குண்டு இனங்காணப்பட்ட 500 மீற்றர் சுற்றளவில் உள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கையும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியூடான போக்குவரத்தும் தற்காலிக்கமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை கடந்த 2017 ஆம் ஆண்டில், பிராங்பேர்ட்டில் 1.4 டன் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் பிரித்தானிய விமானப்படைகள் ஐரோப்பாவில் 2.7 மில்லியன் டன் குண்டுகளை வீசியுள்ளன என நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.