சீனாவில் பரபரப்பை ஏற்படுத்திய வெடிப்பு – வீடுகளிலிருந்து மக்கள் வெளியேற்றம்
சீனாவிலுள்ள இரசாயன ஆலை ஒன்றில் பாரிய வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளனது.
இதனால் வானில் அடர்ந்த கரும்புகை வெளியேறியமையினால் பரபரப்பான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
சிலிக்கான் எண்ணெய் உற்பத்தி செய்யும் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த ஆலை Jiangxi மாநிலத்தில் இருக்கிறது.
வெடிப்பு நேற்று நண்பகலில் ஏற்பட்டதாகச் சீன அரசாங்க ஊடகம் தெரிவித்தது. சம்பவ இடத்தைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகின்றன.
அதில் ஆலைக்கு அருகே செல்ல வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தும் தீயணைப்புத் துறை வீரர்களின் குரல்கள் கேட்டதாக செய்தி வெளியானது.
அவசர உதவி வழங்கும் ஊழியர்களும் அங்கு இருக்கின்றனர். சிலிக்கான் எண்ணெய் தீப்பிடித்துக்கொண்டதால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகள் கூறுகின்றன.
வெடிப்புக்கான உண்மையான காரணம் ஆராயப்படுகிறது. யாருக்கும் காயமேற்படவில்லை. ஆலைக்கு அருகில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.