கியூபாவில் ஆயுதக் கிடங்கு ஒன்றில் வெடி விபத்து : 13 ராணுவ வீரர்களைக் காணவில்லை
கியூபாவில் ஆயுதக் கிடங்கு ஒன்றில் வெடிப்புகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து 13 ராணுவ வீரர்களைக் காணவில்லை என்று அந்நாட்டு ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் கியூபா நேரப்படி செவ்வாய்க்கிழமை (ஜனவரி 8) காலை நிகழ்ந்தது.
கட்டுமானத் தளத்தில் மூண்ட தீ காரணமாக ஆயுதக் கிடங்கில் வெடிப்புகள் ஏற்பட்டதாக கியூபா அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர்.
வெடிப்புகளுக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது.
தீயணைப்புப் பணிகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட இடத்திலிருந்து கிட்டத்தட்ட 361 பேர் வெளியேற்றப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
(Visited 3 times, 1 visits today)