இந்தியாவில் மருந்து ஆலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் : 15 பேர் பலி, 40 பேர் காயம்

இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மருந்து தயாரிப்பு ஆலையில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர் என மாவட்ட அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
40 பேர் காயமடைந்திருப்பதாகத் தெரிவித்த ஆந்திர மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் எம். தீபிகா, மரண எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அச்சம் தெரிவித்தார்.
16 ஹெக்டர் பரப்பளவு கொண்ட மருந்து தயாரிப்புப் பிரிவில் தீ மூண்டதாக மாவட்ட ஆட்சியர் விஜயகிருஷ்ணன் தெரிவித்தார்.
காயமடைந்தோர், ஆலைக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
மதிய உணவு இடைவேளையின்போது வெடிப்பு ஏற்பட்டதாக அறியப்படுகிறது.
வெடிப்புக்கான காரணத்தைக் கண்டறிய உடனடியாகத் தீவிர விசாரணை நடத்துமாறு ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.
(Visited 13 times, 1 visits today)