சிவகாசியில் பட்டாசு ஆலை ஒன்றில் வெடி விபத்து – பலர் சிக்கியுள்ளதாக தகவல்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பெத்தலுபட்டியில் உள்ள ஞானவேல் என்பவரின் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒரு அறை முழுவதும் தரைமட்டமான நிலையில் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தீபாவளியை ஒட்டி, பட்டாசு தயாரிப்புப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருப்பதால் அருகில் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
(Visited 24 times, 1 visits today)





