ஐரோப்பா

இத்தாலியில் இரண்டாவது முறையாக குகையில் சிக்கிய ஆய்வாளர் : பாதுகாப்பாக மீட்பு!

வடக்கு இத்தாலியில் காயமடைந்த குகை ஆய்வாளர் ஒட்டாவியா பியானா பியூனோ ஃபோன்டெனோ 75 மணிநேரத்திற்குப்  பிறகு பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாக ஆல்பைன் மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

மீட்பு நடவடிக்கையின் கடைசிக் கட்டம் எதிர்பார்த்ததை விட மிகவும் சுமூகமாகச் சென்றதாக மீட்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பியூனோ ஃபோன்டெனோ குகையை ஆய்வு செய்துக்கொண்டிருந்த அவர், இத்துடன் இரண்டாவது முறையாக குகையில் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குகையின் அடையாளம் காணப்படாத பகுதியை ஆராயும் போது 5 மீட்டர் (13 அடி) கீழே விழுந்ததில் பியானாவின் முகம், விலா எலும்புகள் மற்றும் முழங்கால் உட்பட பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது அவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!