புறப்பட்டுக்கொண்டிருந்த அமெரிக்க விமானத்தில் வெடித்த சக்கரம் – உயிர் தப்பிய பயணிகள்

புறப்பட்டுக்கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் சக்கரம் வெடித்தமையால் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள Tampa அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானமே இவ்வாறான நிலைக்குள்ளாகியுள்ளது.
பீனிக்ஸ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த அந்த விமானத்தை விமானி உடனடியாக நிறுத்தினார்.
சம்பவ இடத்துக்கு அவசர மருத்துவ வாகனங்கள் வருவது காணொளியில் தெரிகிறது.
விமானத்தில் 174 பயணிகளும் 6 விமானிகளும் இருந்ததாக விமான நிலையத்தின் பேச்சாளர் கூறினார்.
யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகளும் விமானிகளும் விமானத்திலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ஃபீனிக்ஸுக்குச் செல்ல மற்றொரு விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
(Visited 22 times, 1 visits today)