இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டு கொள்வனவு தொடர்பில் விளக்கம்!
இலங்கையில் இலத்திரனியல் கடவுச்சீட்டுகளைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனு தொடர்பில் விளக்கமளிக்கப்படவுள்ளது.
சட்டமா அதிபரினால் நீதிமன்றுக்கு இது தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
5 மில்லியன் இலத்திரனியல் கடவுச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனு தொடர்பில் தேசிய பெறுகைகள் குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு வருவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிந்துரைகளைப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஊடாக அமைச்சரவையின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு இன்று (18) அவர் அறியப்படுத்தியுள்ளார்.
குறித்த கடவுச்சீட்டுக்களைக் கொள்வனவு செய்வதற்கான விலைமனுவை சவாலுக்கு உட்படுத்தி எபிக் லங்கா தனியார் நிறுவனம் தாக்கல் செய்த மனு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான மேலதிக மன்றாடியர் நாயகம் சுமதி தர்மவர்தன குறித்த விடயம் தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைத்தார்.