உலகம்

உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் 2024 அமைதிக்கான நோபல் பரிசு குறித்து வல்லுநர் ஊகங்கள்

காஸாவிலும் உக்ரேனிலும் போர் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டின் (2024) அமைதிக்கான நோபல் பரிசு யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து வல்லுநர்கள் ஊகங்களை வெளியிட்டுள்ளனர்.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாட்டு நிறுவன நிவாரண அமைப்பு (UNRWA), அனைத்துலக நீதிமன்றம், ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் போன்ற பெயர்கள் பலரின் ஊகப் பட்டியலில் முன்னிலை வகிக்கின்றன.

ரஷ்யாவின் அலெக்ஸி நவால்னிக்கு வழங்கப்படலாம் என்கின்றனர் சிலர். ஆனால், அவர் பிப்ரவரி மாதமே இறந்துவிட்டதால் அதற்கு வாய்ப்பில்லை. நோபல் பரிசு இறந்த பிறகு யாருக்கும் வழங்கப்படுவதில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கிக்கு வழங்கலாம் என்பது சிலரின் விருப்பம். ஆனால் போர் புரியும் நாடு ஒன்றின் தலைவர் என்பதால் அவருக்கு வாய்ப்பில்லை.

போப் ஃபிரான்சிஸ், பிரிட்டனின் இயற்கை ஆர்வலர் டேவிட் அட்டன்பரோ உள்ளிட்டோரையும் சிலர் முன்மொழிந்துள்ளனர்.

நோபெல் பரிசுக் குழு அக்டோபர் 11ஆம் திகதி, இந்த ஆண்டின் அமைதிக்கான நோபெல் பரிசு குறித்து அறிவிக்கும்.

See also  உலகை அச்சுறுத்தும் குணப்படுத்த முடியாத வைரஸ் : சிகிச்சைகள் இல்லை என்றும் அறிவிப்பு!

இந்த ஆண்டு அமைதிக்கான நோபெல் பரிசு யாருக்கும் இல்லை என்று அறிவித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏற்கெனவே 19 முறை அவ்வாறு நடந்ததுண்டு. கடைசியாக 1972ஆம் ஆண்டு அவ்வாறு யாருக்கும் பரிசு அறிவிக்கப்படவில்லை

(Visited 1 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்

You cannot copy content of this page

Skip to content