இலங்கை

இலங்கையில் மேலும் பல சட்டங்களை கொண்டு வர எதிர்பார்ப்பு!

இலங்கையில் இன்றிருக்கும் அரசாங்கமானது இலங்கையில் முன்னெப்போதும் இல்லாதது என்றே கூற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதார்.

கடினமான காலங்களில் பொறுப்பேற்கக்கூடிய அனைவரும் அதனுடன் இணைந்துள்ளனர்.

இதில் பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர். நாங்கள் ஒரு பகுதியினருடன் இணைந்து அரசாங்கத்தை அமைத்தோம். ஒவ்வொரு கட்சியிலும் ஒரு பகுதி பிரிந்து மற்ற கட்சிகளுக்குச் சென்றது. இவ்வாறான அரசாங்கத்தின் ஊடாக நாட்டைக் கட்டியெழுப்பும் சவாலை நாம் எதிர்கொண்டோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

உரித்து (உருமய) திட்டத்தின் முதற்கட்டமாக 10,000 விவசாயிகளுக்கு காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

நமது நாடு தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது. இந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இன்னும் சிலர் கஷ்டப்படுகிறார்கள். எம்மால் முடிந்தளவு இந்த மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கினோம். அதற்காக அஸ்வெசும திட்டத்தை செயல்படுத்தினோம். அரச ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுத்தோம்.

வங்குரோத்து நிலையில் இருந்து இப்போதுதான் மீண்டு வருகின்றோம். மூன்றாவது கட்டமாக இந்த நிரந்தர காணி உரிமைகளை மக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறான பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டு இந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றால், நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றதன் பின்னர் எதிர்காலத்தில் என்ன செய்ய முடியாது என நான் கேட்க விரும்புகின்றேன்.

நாம் ஆரம்பித்த இந்தப் பயணத்தைத் தொடர்ந்தால், 2025 ஆம் ஆண்டில் 5% பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. நாட்டை மீட்டெடுக்க அனைவரும் ஒன்றிணைந்தோம். நாங்கள் அங்கு கட்சி அரசியலில் ஈடுபடவில்லை. அப்படி செயற்பட்டிருந்திருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்காது. இந்த பணியை முன்னெடுப்பதில் அனைவரும் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நம்மைப் பற்றி நாம் சிந்திக்கக் கூடாது. நாட்டு மக்களின் எதிர்காலம் பற்றியே சிந்திக்க வேண்டும். நாட்டின் 20 இலட்சம் மக்களுக்கு நாம் அனைவரும் இணைந்து காணி உரிமையை வழங்கியுள்ளோம். மேலும் 20 இலட்சம் பேருக்கு அஸ்வெசும நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. 15 இலட்சம் பேருக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. சுற்றுலா வளர்ச்சியடைந்து வருமான வழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வளவு பாரிய பணியை பாராளுமன்றத்தில் ஒரு குழுவால் செய்ய முடியும் என்றால், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் என்ன செய்ய முடியாது என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். நாம் அந்த வழியில் செல்ல வேண்டும்.

எதிர்காலத்தில் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய மேலும் பல சட்டங்களை கொண்டு வர எதிர்பார்க்கின்றோம். அனைவரும் இணைந்து முன்னேறுவோம். விவசாயத்தை நவீனமயமாக்குவதன் மூலம் நாட்டில் மிகப்பெரிய விவசாய புரட்சி ஏற்பட்டு வருகிறது.

நாம் மீண்டும் கடன் வாங்க முடியாது. நாம் மீண்டும் பிச்சைக்காரர்களின் தேசமாக மாற முடியாது. நமது பெருமையை நாம் பாதுகாக்க வேண்டும். இந்தப் பயணத்தில் நாம் அனைவரும் ஒன்றாகச் செல்ல வேண்டும்.

இன்று நீங்கள் இந்த நாட்டின் உரிமையாளர்கள். அதை மனதில் வைத்து, நீங்கள் அனைவரும் பெருமையுடன் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன், மேலும் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

(Visited 9 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!