ஆசியா செய்தி

லெபனானிலிருந்து வெளியேறுங்கள் – பிரித்தானியா, சுவீடன், பிரான்ஸ் பிரஜைகளுக்கு அறிவிப்பு

லெபனானை விட்டு வெளியேறுமாறு பல நாடுகள் அங்குள்ள தமது பிரஜைகளை வலியுறுத்தியுள்ளன.

மத்திய கிழக்கில் அதிகரித்துள்ள போர் பதற்றம் காரணமாக அமெரிக்காவைத் தொடர்ந்து மேலும் பல நாடுகள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

அதன்படி, பிரித்தானியா, சுவீடன், பிரான்ஸ், கனடா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகள் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளன.

கடந்த புதன்கிழமை தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு இஸ்ரேலுக்கு எதிராக ‘கடுமையான’ பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அறிவித்துள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா உயர்மட்ட தலைவர் கொல்லப்பட்ட சில மணிநேரங்களில் ஹமாஸ் தலைவரும் கொல்லப்பட்டார்.

இந்த நிலையில் மத்திய கிழக்கில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!