இலங்கை

முல்லைத்தீவில் ஆயுதங்கள் மற்றும் தங்கம் தேடிய அகழ்வுப் பணி நாளை தொடரும்…!

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் இன்று பிற்பகல் ஆரம்பமாகிய அகழ்வு பணியானது மாலையுடன் நிறுத்தப்பட்டிருந்தது.

இன்றைய அகழ்வு பணிகளில் எந்தவொரு ஆயுதங்களோ, நகைககளோ மீட்கப்படாத நிலையில் நாளை (26) காலை 9 மணியளவில் மீண்டும் இரண்டாவது நாளாக அகழ்வுபணியானது இடம்பெறவுள்ளது.

புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று (25) மாலை 2.30 மணிமுதல் மாலை 6 மணி வரை நடைபெற்றிருந்தது.

முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் பொலிஸார், விஷேட அதிரடி படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் முன்னிலையில் குறித்த அகழ்வு பணி இடம்பெற்றிருந்தது.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்