பெட்ரோல் குண்டு தாக்குதல் – பிரித்தானிய இராணுவ வீரருக்கு சிறைத்தண்டனை
பொலிஸ் நிலையத்தில் பெட்ரோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு அதிகாரி ஒருவருக்கு, உயிர் ஆபத்தை ஏற்படுத்திய பிரித்தானிய இராணுவ வீரருக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி, மேற்கு லோதியனில் (Lothian) உள்ள லிவிங்ஸ்டனில் உள்ள கட்டிடத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வேன்கள் மீது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
ஜேமி டெய்லர் என்ற 34 வயதான இராணுவ வீரரே இந்த தாக்குதலை மேற்கொண்டார்.
தாக்குதலுக்கு முன்பு அவர் தாயாருக்கு தொலைபேசி ஊடாக அழைப்பை ஏற்படுத்தி தான் தாக்குதல் மேற்கொள்ள போவதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இராணுவ வீரர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.





