சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்படஅறுவருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!
தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் கைதான சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த உட்பட 6 சந்தேக நபர்களையும் ஜனவரி 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் அறுவரும் இன்று (27) மாளிகாகந்த நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தரமற்ற இம்யுனோக்ளோப்யுளின் மருந்து இறக்குமதி தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன், தரமற்ற இம்யுனோக்ளோப்யுளின் மருந்து இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் சுகாதார அமைச்சின் மருந்து வழங்கல் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் கபில விக்ரமநாயக்க உள்ளிட்ட 04 பேரும் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





