இலங்கை

இலங்கையின் புதிய தலைமுறையினருக்கு வழிவிடும் முன்னாள் அமைச்சர்கள் – பத்துல வெளியிட்ட அறிவிப்பு!

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (04) தெரிவித்தார்.

இருபது வருடங்களுக்கு மேலாக ஹோமாகம தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர், அமைச்சரவை அமைச்சர் என பல பதவிகளை வகித்து தன்னால் இயன்றவரை மக்களுக்கு சேவையாற்றியதாக அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதிகள் இன்றி பல வருடங்களாக அநாதரவாக இருந்த ஹோமாகம தொகுதி மக்களுக்கு இந்த நகரை அறிவு மையமாக  மாற்றுவதற்கு தன்னால் இயன்ற அனைத்தையும் செய்துள்ளதாக  பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அடுத்த சில வருடங்களில் மீண்டும் டாக்டர் பட்டம் படிக்க உள்ளதாகவும், படம் தயாரிக்கவும் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

(Visited 19 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்