ICC இலங்கை அணிக்கு தடைவிதித்தால் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் – காஞ்சன!
கிரிக்கட் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் பொறுப்பு அணி தெரிவு அல்லது நிர்வாகத் தெரிவு அல்ல என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் பிரேரணைகளின் ஊடாக ஐ.சி.சி இலங்கை கிரிக்கெட்டுக்கு தடை விதித்தால் அதற்கு 225 பேரும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(Visited 11 times, 1 visits today)





