பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடைந்தாலும் கவலை இல்லை : வரி விதிப்பை இடைநிறுத்த முடியாது என ட்ரம்ப் அறிவிப்பு!

ட்ரம்பின் வரி விதிப்பு கொள்கையால் உலக நாடுகளின் பங்கு சந்தைகள் வீழ்ச்சியடைந்த நிலையில், ட்ரம்ப் வரி விதிப்பை இடைநிறுத்த போவதில்லை என அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியின் “விடுதலை தின” வரிகள் உலகளாவிய மந்தநிலையை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.
அவர்களின் அச்சத்திற்கு அமைய மூன்று முக்கிய பங்குச் சந்தை குறியீடுகளில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டன.
வெள்ளை மாளிகையின் தேசிய பொருளாதார கவுன்சில் இயக்குனர் கெவின் ஹாசெட், சீனாவைத் தவிர அனைத்து நாடுகளுக்கும் 90 நாள் கட்டண இடைநிறுத்தத்தை திரு டிரம்புடன் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனையே ட்ரம்ப் மறுத்துள்ளார். எந்தவொரு இடைநிறுத்தமும் இல்லை என வெள்ளை மாளிகை குறிப்பிட்டுள்ளது.
(Visited 2 times, 1 visits today)