இலங்கையில் சிறிய மழை பெய்தாலும் பேராபத்து!
இலங்கையில் சில பிரதேசங்களில் 350 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளதாகவும் இதன் காரணமாக எதிர்காலத்தில் சிறிய மழை பெய்தாலும் மண்சரிவு அபாயம் ஏற்படலாம் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரித்துள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட விஞ்ஞானி வசந்த சேனாதீர இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை மலையகத்தின் பெரும்பாலான இடங்களில் மின் துண்டிப்பு ஏற்பட்டுள்ளதால் சிக்னல்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே தண்டவாளத்தை கடக்கும் வாகன சாரதிகள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடும் பனிமூட்டம் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதால் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





