நைஜரில் உள்ள 1,500 ராணுவ வீரர்கள் வெளியேற்றம் – மேக்ரான் அறிவிப்பு
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜர் முன்பு பிரான்ஸ் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னர் 1960ம் ஆண்டு நைஜர் சுதந்திர நாடாக உருவானது. ஆனால் அங்கு பிரான்ஸ் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தி வந்தது.
அதன்படி அந்த நாட்டின் அதிபரான முகமது பாசும் பிரான்சுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதனால் அவரை ஆட்சியில் இருந்து அகற்றி கடந்த ஜூலை மாதம் அங்கு ராணுவ ஆட்சி கொண்டுவரப்பட்டது.
எனினும் பிரான்ஸ் நாட்டின் ராணுவ வீரர்கள் சுமார் 1,500 பேர் அங்கு நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர். இந்தநிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் நைஜரில் உள்ள ராணுவ வீரர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளை அங்கிருந்து வெளியேற்றுவதாக அறிவித்துள்ளார். இதனை நைஜர் நாட்டின் ராணுவ ஆட்சிக்குழு வரவேற்றுள்ளது.
(Visited 4 times, 1 visits today)