பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள Eurostar ரயில் சேவை!
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையில், ஆங்கிலக் கால்வாய்(English Channel) கீழ் அமைந்துள்ள சேனல் சுரங்கத்தில் ஏற்பட்ட மின்சாரக் கோளாறு தற்போது சீரமைக்கப்பட்டுள்ள நிலையில் பயணிகள் தங்கள் பயணங்களை தொடங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் இன்று Eurostar இன் வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவொன்றில், சேவைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டாலும் பயண தாமதங்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
சில சந்தர்ப்பங்களில் இறுதி நிமிடங்களில் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படலாம் எனவும் முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் “பயணிகள் ரயிலின் நிலை குறித்த நேரடி புதுப்பிப்புகளை ரயில் நிலையம் மற்றும் கால அட்டவணைகள் பக்கத்தில் சரிபார்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்தி
பல மணி நேரங்களுக்கு பிறகு ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க உள்ள யூரோஸ்டார்





