பல மணி நேரங்களுக்கு பிறகு ரயில் சேவைகளை மீண்டும் தொடங்க உள்ள யூரோஸ்டார்
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையில், ஆங்கிலக் கால்வாய்(English Channel) கீழ் அமைந்துள்ள சேனல் சுரங்கத்தில் மின்சாரம் வழங்குவதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, யூரோஸ்டார்(Eurostar) ரயில் சேவைகளில் பெரும் இடையூறு ஏற்பட்டது.
இந்த சேனல் சுரங்கம் இங்கிலாந்தின் ஃபோல்க்ஸ்டோன்(Folkestone) மற்றும் பிரான்சின் கலேஸ்(Calais) பகுதிகளை இணைக்கிறது.
மின்சார விநியோக சிக்கல் காரணமாக, ஃபோல்க்ஸ்டோன்(Folkestone) மற்றும் கலேஸ்(Calais) ஆகிய இரு முனையங்களிலும் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக ஆரம்பத்தில் லீ ஷட்டில்(Le Shuttle) தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பல மணி நேர ரயில் சேவைகளை மீண்டும் தொடங்குவதாக யூரோஸ்டார் அறிவித்துள்ளது.
“சேனல் சுரங்கப்பாதை பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், நாங்கள் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கின்றோம். மேல்நிலை மின்சாரம் வழங்கல் பிரச்சினை உள்ளது, மேலும் எங்கள் பயணிகள் அனைவரும் தங்கள் பயணத்தை வேறு திகதி ஒத்திவைக்குமாறு நாங்கள் அறிவுறுத்துகிறோம்,” என்று யூரோஸ்டார் தனது வலைத்தளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி





