இந்தியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

ரஷ்யா மீதான கட்டுப்பாடு விதித்த ஐரோப்பிய ஒன்றியம் – இந்திய நிறுவனங்களுக்கு பாதிப்பு

உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விலையை குறைத்துள்ளது.

பரல் ஒன்றுக்கு 60 டொலரிலிருந்து 47.6 டொலராக குறைத்துள்ளது. இதன் மூலம், இந்திய நிறுவனங்கள் பல பாதிப்புக்கு உள்ளாகும் என்ற எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால் ரஷ்ய கச்சா எண்ணெயை சுத்தகரிப்பு செய்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் இந்திய நிறுவனங்களான நயாரா எனர்ஜி மற்றும் ரிலையன்ஸ் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பின் பின்னணி, குறைந்த விலையில் எரிபொருளை வாங்கும் ஐரோப்பிய நாடுகளின் அணுகுமுறையாகும், இது இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதார இழப்புகளை உருவாக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நடவடிக்கையை எதிர்த்துள்ள இந்தியா, ஐரோப்பிய யூனியன் நடவடிக்கையை ஒருதலைபட்சமாகக் கருதி, “இரட்டை நிலைப்பாட்டை” ஐரோப்பிய நாடுகள் ஏற்க கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.

(Visited 13 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி