ஐரோப்பிய தலைவர்கள் பலவீனமானவர்கள் – ட்ரம்ப் விமர்சனம்!
உக்ரைன் போர் தொடர்பில் ஐரோப்பிய தலைவர்களை பலவீனமானவர்கள் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அவர்கள் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் உக்ரைன் போரில் நடவடிக்கை எடுக்கவும் தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக லண்டன் மேயர் சாதிக் கானை (Sadiq Khan) விமர்சித்த ட்ரம்ப், அவரை பேரழிவு எனவும் அழைத்துள்ளார்.
மேலும் குடியேற்ற பிரச்சினைகளை கையாலும் விதம் தொடர்பில் பாரிஸ் மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகளையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபகாலமாக உக்ரைன் – ரஷ்ய போரை நிறைவிற்கு கொண்டுவருவதில் ட்ரம்ப் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். இருப்பினும் இதுவரை எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே ட்ரம்பின் மகன் அவர் அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து விலகக்கூடும் எனத் தெரிவித்திருந்த நிலையில் இந்த கருத்துக்கள் வந்துள்ளன.





