உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானம் வழங்கவுள் ஐரோப்பிய நாடு
உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானத்தை நெதர்லாந்து அரசு வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் 15 மாதங்களை கடந்து இருக்கும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தைக்கு இருநாடுகளும் உடன்படாமல் தொடர்ந்து சண்டையிட்டு வருகின்றனர்.இதனால் மேற்கத்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு முயற்சிகளுக்கு பதிலாக, உக்ரைனுக்கு ஆதரவாக போர் விமானங்கள், டாங்கிகள் மற்றும் வெடி மருந்துகள் என உதவி வருகின்றனர்.
இத்தகைய நடவடிக்கை உக்ரைன் ரஷ்யா இடையிலான மோதலை மேலும் தீவிரமடையவே வைக்கின்றனர்.இந்நிலையில் உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானத்தை நெதர்லாந்து அரசு கூடிய விரைவில் வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே, உக்ரைனுக்கு F-16 ரக போர் விமானத்தை வழங்குவதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
ஏற்கனவே போலந்து, பிரித்தானியா ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.