ரஷ்ய டீசலுக்கு தடை விதிக்க ஐரோப்பா முயற்சி – உலகளவில் டீசல் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

ரஷ்யாவில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட டீசலுக்கு தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை மேற்கொண்டு வருகின்றது.
எனினும், இது உலகளவில் டீசல் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த அச்ச நிலைமையினால், சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை நேற்று தினம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.33 டொலராக குறைந்துள்ளது.
பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை 69.67 டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் $3.08 ஆக குறைந்துள்ளது.
உலக எரிசக்தி சந்தையில் நிலவும் மாற்றங்கள், வர்த்தகத்தையும், நுகர்வோர்களையும் நேரடியாக பாதிக்கக்கூடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)