ஐரோப்பா அமெரிக்காவிலிருந்து சுதந்திரமாக மாற வேண்டும் – ஜெர்மனி வலியுறுத்தல்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கை ஐரோப்பா அமெரிக்காவிலிருந்து “மிகவும் சுதந்திரமாக” மாற வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக ஜெர்மன் சேன்சலர் பிர்டரிக் மெர்ஸ் (Chancellor Friedrich Merz ) இன்று அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய உத்தி ஐரோப்பிய நட்பு நாடுகளை பலவீனமானவர்களாக சித்தரிக்கிறது எனக் கூறிய அவர், தீவிர வலதுசாரி அரசியல் கட்சிகளுக்கு மறைமுக ஆதரவை வழங்குகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஐரோப்பாவின் சுதந்திரமான பேச்சு மற்றும் இடம்பெயர்வு கொள்கையை விமர்சிக்கிறது எனக் குறிப்பிட்ட அவர், எந்தக் கட்சிகள் தங்களை ஆள வேண்டும் என்பதை ஐரோப்பிய குடிமக்கள் மட்டுமே தீர்மானிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
“ஐரோப்பாவில் ஜனநாயகத்தை அமெரிக்கர்கள் காப்பாற்ற விரும்புகிறார்கள், அதற்கான எந்த அவசியமும் எனக்குத் தெரியவில்லை. அவ்வாறு அதைக் காப்பாற்ற வேண்டியிருந்தால், நாங்கள் அதை தனியாக நிர்வகிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அமெரிக்க ஆவணம், “ஐரோப்பாவிலும், ஜெர்மனியிலும், பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படையில் அமெரிக்காவிலிருந்து மிகவும் சுதந்திரமாக மாற வேண்டும் என்ற எனது மதிப்பீட்டை உறுதிப்படுத்துகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




