போரிஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பா : மீட்பு நடவடிக்கையில் முனைப்பு காட்டும் அதிகாரிகள்!
ஐரோப்பா முழுவதும் போரிஸ் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 07 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 04 பேர் மாயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ருமேனியாவில் ஐந்து பேரும், ஆஸ்திரியா மற்றும் போலந்தில் தலா ஒருவரும் வெள்ளத்தால் உயிரிழந்துள்ளனர். செக் குடியரசில், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட நான்கு பேரைக் காணவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் சுமார் 100 இடங்களில் அதிக வெள்ள எச்சரிக்கையை அதிகாரிகள் அறிவித்ததால் செக் குடியரசின் பெரும்பாலான பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ஓபவா நகரில், சுமார் 56,000 மக்கள்தொகையில் 10,000 பேர் வரை தங்கள் வீடுகளை விட்டு உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஓபவா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல மீட்பு குழுவினர் படகுகளை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.