ஐரோப்பா

வர்த்தக உறவை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம் – தென்னமெரிக்கா

ஐரோப்பிய ஒன்றியம் வெள்ளிக்கிழமை (டிசம்பர்6) நான்கு தென்னமெரிக்க நாடுகளுடன் வர்த்தக உடன்பாடு கண்டது.

இந்த உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை நீண்டநாள்களாக இழுபறி நிலையில் இருந்தது. இந்நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு பெற்றுள்ள டோனல்ட் டிரம்ப் உலகின் சில பெரிய பொருளியல் நாடுகளுக்கு எதிராக வரி விதிக்கப்போவதாக அச்சுறுத்தியதால் இந்தப் பேச்சுவார்த்தை சூடுபிடித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்கசுர் என்ற பெயரில் அர்ஜெண்டினா, பிரேசில், பாராகுவே, உருகுவே ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இந்த வர்த்தகக் கூட்டமைப்பு உலகின் மிகப் பெரிய வர்த்தக மண்டலமாக உருவெடுத்துள்ளது.அதனுடனான ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் என்று கூறப்படுகிறது.

டிரம்ப் அமெரிக்க அதிபரானால் உலகப் பொருளியல் சிதறிவிடும் சாத்தியம் இருப்பதாக ஐரோப்பிய தலைவர்கள் எண்ணுகின்றனர். இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தடையற்ற வர்த்தகத்துக்கு கிடைத்த வெற்றி என்று பார்க்கப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் 700 மில்லியன் மக்கள் வாழும் சந்தையைத் திறந்துவிடும் என்று நம்பப்படுகிறது.ஆனால், இந்த ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிளவை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

ஏனெனில், இதனால் மலிவான வேளாண் பொருள்கள் ஐரோப்பிய நாட்டுச் சந்தைகளை நிரப்பும் என்று கூறி, இந்த ஒப்பந்தத்திற்கு பிரான்ஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த உடன்பாடு ஐரோப்பிய விவசாயிகளைப் பாதிக்கும் என்றும் அது எச்சரித்துள்ளது.

ஒப்பந்தத்தை எதிர்க்கும்படி பிரான்ஸ் விடுத்த அறைகூவலை பல நாடுகள் கண்டுகொள்ளவில்லை. எனினும், பிரான்ஸ் தனது எதிர்ப்பைத் தொடரப் போவதாக அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ள போதிலும் ஒப்பந்தம் மறுஉறுதி செய்யப்பட வேண்டிய நாள் குறிப்பிடப்படவில்லை.

டோனல்ட் டிரம்பின் வெற்றியானது பல நாடுகளில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு உயர் வரிவிதிப்பு இருக்கும் என்ற அச்சத்தை எற்படுத்தியுள்ளது. உலக நாடுகளின் பொருள்களுக்கு எதிராக 10லிருந்து 29 சதவீதம் வரையிலான வரியும், சீனாவிலிருந்து வரும் பொருள்களுக்கு 60% வரியும் விதிக்கப்போவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்