சீன வாகனங்களுக்கான வரியை உயர்த்த தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்
சீன மின்சார வாகனங்களுக்கான வரியை உயர்த்த ஐரோப்பிய ஒன்றியம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிராந்தியத்தில் வாகனத் தொழிலைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒவ்வொரு உற்பத்தியாளருக்கும் 17.4% முதல் 37.6% வரை வரி விதிக்கப்படுகிறது.
மேலும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து மின்சார வாகனங்களுக்கும் இறக்குமதி வரியாக விதிக்கப்பட்ட 10% வரியில் எந்த மாற்றமும் இல்லை.
இதனால் ஐரோப்பிய யூனியனில் சீன எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை கணிசமாக உயரலாம் என்று கூறப்படுகிறது.
(Visited 4 times, 1 visits today)