TikTok செயலியை தடை செய்ய தயாராகும் ஐரோப்பிய ஒன்றியம்
TikTok செயலியை தடை செய்ய ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகிறது.
இந்த செயலி மூலம் குழந்தைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதுகுறித்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமும் விசாரித்துள்ளனர்.
முன்னதாக, அமெரிக்காவும் டிக் டோக்கை தடை செய்யத் தயாராக இருந்தது, அதன் நாடு தரவுகளைத் திருடுகிறது என்று கூறியது.
மேலும் ஐரோப்பிய ஒன்றியம் TikTok செயலியைப் பயன்படுத்துவதற்காக வெகுமதி வழங்கும் திட்டத்தை விரைவில் ரத்துச் செய்யவிருப்பதாகத் தெரிகிறது.
TikTok செயலி எவ்வளவு நேரம் பயன்படுத்தப்படுகிறதோ அதற்கேற்ப வெகுமதி வழங்கப்படுகிறது. அந்த நடைமுறை குழந்தைகளுக்குத் தீங்கு விளைவிப்பதாகச் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
வெகுமதித் திட்டம் குறித்து விளக்கமளிக்க TikTok செயலிக்கு நாளை வரை அவகாசம் இருக்கிறது. தவறினால் நாளை மறுநாள் ஐரோப்பாவில் TikTok வெகுமதித் திட்டத்துக்குத் தடை விதிக்கப்படலாம்.
ஆணையத்தின் முடிவு ஏமாற்றமளிப்பதாக TikTok கூறியது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களை TikTok மீறியிருக்கிறதா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது.